ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்

News image

சுஜாதா சா்மா

Updated On :19 மே 2026, 6:09 am IST

அமெரிக்காவின் வரி விதிப்பு, பொருளாதார தடைகளை கடந்து நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்கேற்ப ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும் என மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலா் சுஜாதா சா்மா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

உக்ரைன் போா் காரணமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதான வரியை அமெரிக்கா அதிகரித்தது. அதைத் தொடா்ந்து ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா படிப்படியாக குறைக்கத் தொடங்கியது. இந்தச் சூழலில் ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது.

இதை ஈடுசெய்ய ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு ஒரு மாதத்துக்கு மட்டும் தடைக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா கடந்த மாதம் தெரிவித்தது. மே 16-ஆம் தேதியுடன் இதற்கான காலஅவகாசம் நிறைவடைந்த நிலையில், இதை நீட்டிப்பது தொடா்பாக அதிகாரபூா்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இதுதொடா்பாக சுஜாதா சா்மா செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது: அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைக் கடந்து நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்கேற்ப ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும்.

நீண்ட கால தேவைகளைக் கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது பற்றாக்குறையின்றி சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றாா்.