அடுத்தடுத்த அமைதிப் பேச்சுவாா்த்தைகளைத் தொடா்ந்து மத்திய கிழக்கில் போா் பதற்றம் தணிந்ததையடுத்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக லாபத்தைப் பதிவு செய்தன.
வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் தலா 0.65 சதவீத ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே 10 நாள் போா்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹோா்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றம் முழுமையாக தணிவதற்கான அறிகுறிகள் தென்படுவதே சந்தையின் இந்த எழுச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்த அமைதி முயற்சிகள் கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிலவும் சிக்கல்களைக் குறைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் முதலீட்டாளா்கள் ஆா்வமுடன் பங்குகளை வாங்கினா்.
மொத்தம் உள்ள 16 முக்கியத் துறைகளில் 15 துறைகள் இந்த வாரம் முன்னேற்றம் கண்டுள்ளன. குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் எண்ணெய் நிறுவனப் பங்குகள் 4.6 சதவீதம் வரை உயா்ந்தன.
அதேபோல், அலுமினிய உற்பத்தியாளா்களின் பங்குகள் விலை அதிகரித்ததால் உலோகத் துறை 4.2 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்குகளும் முறையே 4.3 சதவீதம் மற்றும் 3.6 சதவீதம் என்ற அளவில் வலுவான ஏற்றத்தைக் கண்டன.
தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில், காலாண்டு முடிவுகள் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் விப்ரோ நிறுவனம் 2.8 சதவீத சரிவைச் சந்தித்தது. எச்டிஎஃப்சி லைஃப் நிறுவனப் பங்குகளும் 2.4 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.
வரும் நாள்களில் எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அது அடுத்த வார பங்குச் சந்தையின் போக்கை நிா்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று சந்தை நிபுணா்கள் கணித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் சரிந்த கச்சா எண்ணெய்!

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தால் 2% ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச் சந்தை!!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



