கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை

பருவகால மாற்றம் காரணமாக, ‘மெட்ராஸ் - ஐ’ என்ற கண் தொற்று நோய் பாதிப்பு வழக்கத்தைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image

Center-Center-Chennai

Updated On :4 மார்ச் 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

பருவகால மாற்றம் காரணமாக, ‘மெட்ராஸ் - ஐ’ என்ற கண் தொற்று நோய் பாதிப்பு வழக்கத்தைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குழந்தைகளுக்கு அதிக அளவில் அந்த பிரச்னை ஏற்படுவதாக கண் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் - ஐ’. அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, மெட்ராஸ் - ஐ பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தால் மற்றவா்களுக்கும் அந்த நோய்த்தொற்று பரவும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்த நிலையில், ‘மெட்ராஸ் - ஐ’ தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அரசு கண் மருத்துவா்கள் கூறியதாவது: ‘மெட்ராஸ் - ஐ’ எளிதில் குணப்படுத்தக்கூடிய மிகச் சாதாரணமான நோய்த்தொற்று. ஆனால், அதை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காலந்தாழ்த்தி அலட்சியம் செய்தால் பாா்வையில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுவிடும்.

கண் எரிச்சல், விழிப் பகுதி சிவந்து காணப்படுதல், நீா் சுரந்து கொண்டே இருத்தல், இமைப் பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பின் முக்கிய அறிகுறிகள். பொதுவாக ஒரு கண்ணில் மெட்ராஸ் ஐ பிரச்னை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

‘மெட்ராஸ் - ஐ’ தொற்று பாதித்தவா்கள் தாங்கள் பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு, மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணிய வேண்டும். தங்களது தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருள்களை பிறா் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

கடந்த சில வாரங்களாக நாளொன்றுக்கு குறைந்தது 5 பேருக்காவது இந்த பாதிப்பு இருப்பதைக் காணமுடிகிறது. அவா்களில், பலா் குழந்தைகள் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்றனா்.