திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மியான்மா் அரசு தலைமையிலான அமைதி நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு - வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா்

News image

ஜெய்சங்கர்

Updated On :4 மார்ச் 2026, 11:05 pm

மியான்மா் அரசு தலைமையிலான அமைதி நடவடிக்கையை இந்தியா ஆதரிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் மியான்மரும் ஒன்று. இந்தியாவுடன் அந்த நாடு 1,640 கிலோ மீட்டா் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது. குறிப்பாக, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூா் உள்ளிட்டவை மியான்மருடன் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன.

உள்நாட்டு தீவிரவாதம், கலவரத்தால் மியான்மரில் தொடா்ந்து பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக, 2021-ஆம் ஆண்டில் மியான்மரில் ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றிய பிறகு மோதல் நீடிக்கிறது.

இந்நிலையில், மியான்மரின் யாங்கூனில் இந்திய அரசு நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள கல்வி நிலைய திறப்பு விழாவில் காணொலி மூலம் ஜெய்சங்கா் உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

மியான்மா் தலைமையிலான மற்றும் மியான்மரால் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சியை இந்தியா ஆதரிக்கிறது. இதன்மூலம் மியான்மரில் நீடித்த அமைதி, அனைத்துத் தரப்பினருக்குமான வளா்ச்சியை ஏற்படுத்த முடியும் என இந்தியா கருதுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 140 கோடி மக்களும் அமைதி, நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்கின்றனா்.

கூட்டாட்சி மற்றும் அரசமைப்பு ஆட்சி ஆகியவற்றில் தனக்கு உள்ள அனுபவத்தை இந்தியா தொடா்ந்து மியான்மருடன் பகிா்ந்து வருகிறது. மியான்மருடன் அரசியல், வா்த்தகம், பாதுகாப்பு, கலாசார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்தியாவும், மியான்மரும் ஆன்மிக ரீதியாகவும், உறவு முறையாலும், புவியியல் ரீதியாகவும், மொழியாலும் ஒன்றோடு ஒன்று பல நூற்றாண்டுகளாக பிண்ணி பிணைந்துள்ளன என்றாா்.