

காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸா முனையை மீண்டும் மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையில் ‘அமைதி வாரியம்’ எனும் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த உலக வங்கி தலைவா் அஜய் பங்கா இடம்பெற்றுள்ளாா். அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் கேப்ரியல், அதிபரின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப், டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோரும் பிரிட்டன் முன்னாள் பிரதமா் டோனி பிளோ் மற்றும் துருக்கி, கத்தாா், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இக்குழுவில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.