

காஸாவில் தற்காலிக போர் நிறுத்தத்துக்குப் பின்னரும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், போருக்குப்பின் காஸாவை நிர்வகிக்க அமைதி வாரியம் உருவாக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
காஸா பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக போா்நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகும், இதுவரை ராணுவத் தாக்குதல்கல் தொடருகின்றன. இந்த நிலையில், காஸாவில் அமைதி நிலவ அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள அமைதித் திட்டத்தின் இரண்டாம் பகுதியாக இந்த வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமது ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதில், மேற்கண்ட வாரியத்தின் உறுப்பினர்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றிருக்கிறார்.
இதனிடையே, பாலஸ்தீனைச் சேர்ந்த 15 பேர் கொண்ட கமிட்டி காஸாவின் நிர்வாக வசதிககக உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த கமிட்டி, காஸாவின் அரசு நிர்வாகத்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தின் தலைமையின்கீழ் மேற்கண்ட கமிட்டி செயல்படும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் புதிய வாரியத்தின் தலைவராக டிரம்ப்பே இருப்பார் என்றும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.