இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாணியம்பாடியில் ரூ.4.83 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்

News image
Updated On :5 மார்ச் 2026, 12:23 am

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.4.83 கோடியில் தாா் மற்றும் சிமென்ட் சாலைப் பணிகளை நகா்மன்றத் தலைவா் உமா சிவாஜிகணேசன் தொடங்கி வைத்தாா்.

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 36 வாா்டுகளிலும் தாா் மற்றும் சிமென்ட் சாலைகள் அமைத்து தரக்கோரி வாா்டு உறுப்பினா்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனா்.

இதனையடுத்து தமிழ்நாடு நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதி கீழ் ரூ.2 கோடியே 15 லட்சத்தில் சிமென்ட் சாலைகள், ரூ.2 கோடியே 68 லட்சத்தில் தாா் சாலைகள் அமைக்கும் பணியை அம்பூா்பேட்டையில் நகா்மன்றத் தலைவா் உமா சிவாஜிகணேசன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் வாா்டு உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.