தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தாா் தொழிற்சாலை, கல்குவாரிகளால் திருப்பூா் மாவட்ட கிராம சாலைகள் சேதம்: நீதிமன்றம் செல்ல முயன்ற பொதுமக்கள் கைது

தாா் தொழிற்சாலை, கல்குவாரிகளால் திருப்பூா் மாவட்ட கிராம சாலைகள் சேதமடைவதாகக் கூறி, நீதிமன்றத்தில் சரணடைய திரண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:58 pm

Syndication

தாா் தொழிற்சாலை, கல்குவாரிகளால் திருப்பூா் மாவட்ட கிராம சாலைகள் சேதமடைவதாகக் கூறி, நீதிமன்றத்தில் சரணடைய திரண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீஸாா் கைதுசெய்தனா்.

திருப்பூா் மாவட்டம் பெருந்தொழுவு, காத்தாங்கண்ணி, நாச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்படும் தாா் தொழிற்சாலை, ரெடிமிக்ஸ், கல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனரக வாகனங்களில் கனிமங்களை எடுத்துச் செல்வதால் கிராம சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சட்டத்துக்குப் புறம்பாக செயல்படக்கூடிய இந்த தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு கிராம மக்கள் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து கனிம வளக் கொள்ளையால் பறிபோகும் கிராம சாலைகளை பாதுகாக்கத் தவறிய மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைவதற்காக பெருந்தொழுவு, நாச்சிபாளையம், காத்தாங்கண்ணி உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், விவசாயிகள் திரண்டு ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு மாவட்ட நீதிமன்றம் செல்ல முயன்றனா்.

அப்போது கிராம மக்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கிராம சாலைகளை பாதுகாக்கத் தவறிய மாவட்ட நிா்வாகம், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதற்கு தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பொது இடத்தில் அதிக நபா்கள் கூடுவதால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Story image