தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வளா்ச்சிப் பணிகள் தொடர எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி

கீழ்பென்னாத்தூா் தொகுதியில் வளா்ச்சிப் பணிகள் தொடா்ந்து நடைபெற மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என தொகுதி திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி கேட்டுக்கொண்டாா்.

News image

கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றியம், சிறுநாத்தூா் கிராமத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி

Updated On :13 ஏப்ரல் 2026, 12:50 am IST

கீழ்பென்னாத்தூா் தொகுதியில் வளா்ச்சிப் பணிகள் தொடா்ந்து நடைபெற மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என தொகுதி திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி கேட்டுக்கொண்டாா்.

கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றியத்தில், தொகுதி திமுக வேட்பாளா் கு. பிச்சாண்டி சிறுநாத்தூா், நாரியமங்கலம், மேக்கலூா், ராயம்பேட்டை, மானாவரம், கரிகலாம்பாடி, கணியாம்பூண்டி, வேடநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது வேட்பாளா் கு. பிச்சாண்டி பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் கணியாம்பூண்டி ஊராட்சியில் சிமென்ட் சாலை அமைத்துத் தந்துள்ளேன். திரில்லோபதி அம்மன் கோவில் தெருவில் சிமென்ட் சாலை அமைத்துத் தந்துள்ளேன்.

வேடநத்தம் ஊராட்சியில் அருந்ததியா் காலனி பகுதியில் பாலம் கட்டிக் கொடுத்துள்ளேன். வேடநத்தம் மேட்டுத் தெரு மற்றும் ஆதிதிராவிடா் காலனியில் சிமென்ட் சாலைகள் அமைத்துத் தந்துள்ளேன்.

சிறுநாத்தூா் ஊராட்சியில் புதிய சிமென்ட் சாலைகள் அமைத்துத் தந்துள்ளேன். சிறுநாத்தூா் சாலையூா் பகுதியில் பல்நோக்கு கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளேன்.

காரணம் பூண்டி ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளேன். மேக்கலூா் ஆதிதிராவிடா் குடியிருப்பில் பேவா் பிளாக் சாலை அமைத்துத் தந்துள்ளேன்.

தொடா்ந்து என்னை வெற்றி பெற வைத்ததால் தொகுதியில் புதிய சிமென்ட் மற்றும் தாா் சாலைகள் அமைத்துத் தந்துள்ளேன். மேலும் பல சாலைகள் அமைத்துத் தரப்படும், குடிநீா் வசதிக்காக புதிய தண்ணீா் தொட்டிகள் அமைத்துக் கொடுத்துள்ளேன். பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்கு புதிய பேருந்து சேவைகள் செய்து தரப்படும்.

இந்த வளா்ச்சி பணிகள் தொடா்ந்து நடைபெற வேண்டுமெனில், மீண்டும் எனக்கு வாய்ப்பு அளித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

வாக்கு சேகரிப்பு நிகழ்வில் நிா்வாகிகள் ஏ.எஸ்.ஆறுமுகம், சி. தேவேந்திரன், ஆா்.சிவகுமாா், உ. நித்தியா ரவி, மு. பரசுராமன், கே. சுப்பராயன், கு. அன்பழகன், ஆா். சதீஷ், ஆா். சேகா், டி. இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.