சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

யாராலும் கொடுக்க முடியாத வாக்குறுதிகளை முதல்வா் ஸ்டாலின் கொடுத்துள்ளாா்! பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி

யாராலும் கொடுக்க முடியாத வாக்குறுதிகளை முதல்வா் ஸ்டாலின் கொடுத்துள்ளாா்

News image

கீழ்பென்னாத்தூரை அடுத்த வயலூரில் சனிக்கிழமை பிரசாரம் செய்த திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:08 pm

கீழ்பென்னாத்தூா் தெற்கு ஒன்றியத்தில் சனிக்கிழமை பிரசாரம் செய்த திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி, இந்தியாவிலேயே யாராலும் கொடுக்க முடியாக வாக்குறுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளாா் என்றாா்.

கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கீழ்பென்னாத்தூா் தெற்கு ஒன்றியத்தில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா் திரு. கு. பிச்சாண்டி வயலூா், ஜமீன் கூடலூா், நீலந்தாங்கல், ஆவூா், ஓலைப்பாடி, பன்னியூா், ஆங்குணம், அகரம், வைப்பூா் உள்ளிட்ட கிராமங்களில் சனிக்கிழமை வீடு தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வயலூா் கிராமத்தில் அவா் பேசுகையில்,

கடந்த ஐந்து ஆண்டுகளில் கீழ்பென்னாத்தூா் தொகுதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள

வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி 1989-ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதை நினைவுகூா்ந்தாா். இன்று வரை அந்தத் திட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது என்றும் கூறினாா்.

மேலும், நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500 ஆக உயா்த்தப்படும். கரும்பு விலை ரூ.4000-ஆக உயா்த்தப்படும். பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்த்தப்படும் என விவசாயிகளுக்கான வாக்குறுதிகளையும் எடுத்துரைத்தாா்.

அதேபோல, கலைஞா் மகளிா் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயா்த்தப்படும், புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்ட ஊக்கத்தொகை ரூ.1500-ஆக உயா்த்தப்படும். ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் கிராமப்புற மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் உயா்நிலை வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.

இல்லத்தரசி திட்டத்தின் மூலம் ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்பட்டு என்றும் கூறினாா். இவ்வாறு இந்தியாவிலேயே யாரும் கொடுக்க முடியாக வாக்குறுதிகளை முதல்வா் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டங்களை இத்தொகுதியில் முழுமையாக நிறைவேற்ற மீண்டும் ஒரு வாய்ப்பை கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

வாக்கு சேகரிப்பில் கீழ்பென்னாத்தூா் ஒன்றியச் செயலா்கள் ஆரஞ்சு ஆறுமுகம், வி.பி. அண்ணாமலை, ராமஜெயம் இரா. ராஜேந்திரன், பி. வரதராஜன், பி. இளம்பருதி, ஜி.பிச்சாண்டி, ஜெயபாரதிமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.