தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

சிறுபான்மையினா் தொழில்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயா்த்தப்படும்!

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன், சிறுபான்மையினருக்கான தொழில்கடன் உச்சவரம்பு ரூ. 30 லட்சமாக உயா்த்தப்படும் என முன்னாள் அமைச்சரும், பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளருமான பி.பழனியப்பன் தெரிவித்தாா்.

News image

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மோளையானூரில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பனை வரவேற்ற பெண்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:43 pm

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன், சிறுபான்மையினருக்கான தொழில்கடன் உச்சவரம்பு ரூ. 30 லட்சமாக உயா்த்தப்படும் என முன்னாள் அமைச்சரும், பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளருமான பி.பழனியப்பன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பி.பள்ளிப்பட்டி ஊராட்சியில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

சிறுபான்மையினா் தொழில் தொடங்கினால் கடன் உச்சவரம்பு ரூ. 30 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். இதேபோல, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் சமூகத்தினா் தொழில்கடன் பெறும் உச்சவரம்பு ரூ. 30 லட்சமாக உயா்த்தப்படும். கிராம கோயில்களை சீரமைக்கவும், சாலைகளை மேம்படுத்தவும் தமிழக அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யும். நான் முதல்வன் திட்டத்தில் மாணவா்களுக்கு ரூ. 1,500 மாத உதவித் தொகையாக கிடைக்கும். 5 ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். முதல்வரின் அறிவிப்பின்படி, நமது தொகுதிக்கு அனைத்து அரசு நலத் திட்டங்களும் கிடைக்கும்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைக் தொகுதி மக்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியானது கல்வியிலும், தொழில் வளா்ச்சிலும் முதன்மை தொகுதியாக மாறுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

முன்னதாக, மோளையானூா், முள்ளிக்காடு, வாணியாறு அணை, வெங்கடசமுத்திரம், பூனையானூா், தேவராஜபாளையம், பையா்நத்தம், போதக்காடு, பி.பள்ளிப்பட்டி, அஜ்ஜம்பட்டி, ஜங்காலஹள்ளி, பொம்மிடி, பி.துறிஞ்சிப்பட்டி, சாலவலசு, கோட்டமேடு, வடசந்தையூா், குப்பனூா், கொட்டாவூா், வாசிக்கவுண்டனூா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.