ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் வேட்புமனு தாக்கல்

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் பி.பழனியப்பன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:12 am IST

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் பி.பழனியப்பன், தமது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் வழங்கினாா்.

இதில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு, மதிமுக மாவட்டச் செயலா் கோ.ராமதாஸ், விசிக பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மாவட்டச் செயலா் சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தவெக, நாதக வேட்பாளா் மனு தாக்கல்:

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் தவெக வேட்பாளா் எஸ்.திலகவதி, நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அா்ச்சனா, சுயேச்சை வேட்பாளா் அய்யாகண்ணு உள்ளிட்டோா் தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனா். பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் மாற்று வேட்பாளா் ஒருவா் உள்பட 5 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.