இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தற்கொலையைத் தடுக்க.. கோடா பயிற்சி மையங்கள் எடுத்திருக்கும் முடிவு

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் அமைந்திருக்கும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் அதிகரித்த மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2023, 10:32 am

DIN


கோடா: ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் அமைந்திருக்கும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் அதிகரித்த மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயிற்சி மையங்களிலும், அடுத்த 2 மாதங்களுக்கு தேர்வு மற்றும் பரீட்சைகள் எதுவும் நடத்தப்படாது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்த கொண்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி மையங்களில் படித்து வரும் மாணவர்களுக்கு உடனடியாக மனரீதியான ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்றும் இரண்டு மாதங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் பயிற்சி மையங்களுக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் மட்டும்ட கோடா பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வந்த 21 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், நேற்று ஒரே நாளில் இரு மாணவர்கள் தற்கொலையால் இது 23 ஆக அதிகரித்தது.

மகாராஷ்டிரத்தைச் ச்ரந்த அவிஷ்கர் என்ற மாணவர், கட்டடத்தின் 6வதுமாடியில் இருந்து குதித்தும், பிகாரைச் சேர்ந்த ஆதர்ஷ் ராஜ் தனது வாடகை வீட்டில் தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

முன்னதாக, பயிற்சி மையங்களில் உள்ள மின் விசிறிகளில் தற்கொலைத் தடுப்பு கருவிகளைப் பொருத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று இவ்விரு சம்பவங்களும் நடந்துள்ளன.

தற்கொலையைத் தடுக்க மின் விசிறிகளில் கருவிகளைப் பொருத்துவது ஒன்றே முடிவு அல்ல என்பதையே நேற்யை இரு சம்பவங்களும் உறுதி செய்துள்ளன.

கோடாவில் உள்ள பல பயிற்சி மையங்களில் பல மாணவர்கள் 9ஆம் வகுப்பு முதலே சேர்ந்து நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார்கள். கடுமையான அழுத்தம், மன உளைச்சல் போன்றவற்றால் சில மாணவர்கள் இந்த துயரமான முடிவைத் தேடிக்கொள்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.