தேர்தல் வந்தால் விலைவாசி குறையும்: மம்தா

நாட்டில் தேர்தல் வரும்வரை காத்திருந்து விலைவாசி குறைக்கப்படுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். 
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

நாட்டில் தேர்தல் வரும்வரை காத்திருந்து விலைவாசி குறைக்கப்படுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். 

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையை ரூ.200 வரை குறைப்பதாகவும், ரூ. 200 மானியம் கூடுதலாக வழங்கப்படும் எனவும் நேற்று மத்திய பாஜக அறிவித்திருந்தது. 

இது தொடர்பாக பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் வந்தால்தான் விலைவாசி உயர்வு குறைக்கப்படுகிறது. அவர்கள் (பாஜக) தேர்தலுக்காக விலையை குறைத்துள்ளனர் எனக் குற்றம் சாட்டினார். 

நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கு வந்தது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த மம்தா, ரக்‌ஷா பந்தனுக்காக நடிகர் அமிதாப் பச்சனை நேரில் சந்தித்தேன். இன்று நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அமிதாப் பச்சனுக்கு நான் ராக்கி கயிறு கட்டினேன். அவரின் குடும்பத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். நாட்டிற்காக அதிகம் விஷயங்களைச் செய்த குடும்பங்களில் அமிதாப் பச்சனின் குடும்பமும் ஒன்று. துர்கா பூஜை மற்றும் சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன் எனக் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com