சூப்பர் மூன் எனப்படும் பெரு நிலவு: இன்று வானில் தெரியும்!

இயற்கையின் பல அதிசயங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ப்ளூ மூன் அல்லது சூப்பர் மூன் எனப்படும் பெரு நிலவு இன்று வானில் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரு நிலவு இன்று வானில் தெரியும்!
பெரு நிலவு இன்று வானில் தெரியும்!


இயற்கையின் பல அதிசயங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ப்ளூ மூன் அல்லது சூப்பர் மூன் எனப்படும் பெரு நிலவு இன்று வானில் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பௌர்ணமி நாள் என்பதால், வழக்கமான அளவைக் காட்டிலும் நிலவு சற்று பெரிதாகவும், இன்னும் வெளிச்சமாகவும் வானில் தோன்றும். இந்த ஆண்டில் நிலவு பெரிதாகத் தெரியும் நாள்களில் இன்றும் ஒரு நாளாக உள்ளது. ஏனெனில் இதுபோன்ற நாள்களில் தன்னுடைய சுற்றப்பாதையில் பூமிக்கு முன்னெப்போதையும்விட நெருக்கமாக நிலவு வருகிறது. இன்று மேலும் ஒரு சிறப்பாக, இந்த நிலவு சனிக் கிரகத்துக்கும் சற்று நெருக்கமாக வருகிறது.

பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் நிலவானது, சில நேரங்களில் தனது புவி வட்டப் பாதையில், நிலவுக்கு மிக அருகாமையில் வரும்போது இந்த பெரு நிலவு என்ற இயற்கையின் பேரதிசயம் நிகழ்கிறது. பூமியில் இருந்து 4,05,500 கி.மீ. தொலைவில் இருக்கும் நிலவானது இன்று 3,57,344 கிலோ மீட்டர் தொலைவுக்கு சற்று நெருங்கி வரும். இதனால், வழக்கமான அளவை விடவும் பெரிதாகவும் பிரகாசமாகவும் நிலவு ஜொலிக்கவிருக்கிறது.

ப்ளூ மூன் எனப்படுவது, அதன் நிறத்தைக் கொண்டு கூறப்படுவதில்லை. மாறாக, ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வரும் நாள்களைத்தான் ப்ளூ மூன் என்கிறார்கள். நிச்சயம் இன்று நிலவு நீல நிறத்தில் எல்லாம் தெரியாது. காத்திருந்து ஏமாற வேண்டாம்.

இந்திய நேரப்படி 9.30 மணிக்கு, நிலவு பெரிதாகவும், சற்று பிரசாகமாகவும் தெரியும். எனவே சரியாக அந்த நேரத்தில் பார்க்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com