ஐஃபோன் 15 வகை கைப்பேசியை செப்டம்பர் 12ஆம் தேதி அறிமுகம் செய்யவிருப்பதாக அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அறிவித்திருக்கிறது.
அன்றைய தினம், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய வகை கைப்பேசிகளும் அறிமுகமாகவிருக்கின்றன.
இதையும் படிக்க.. சூப்பர் மூன் எனப்படும் பெரு நிலவு: இன்று வானில் தெரியும்!
செப்டம்பர் 12ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு ஐஃபோன் 15 மாடல் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்த நிகழ்வை ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் மக்கள் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியான நிலையில், ஐஃபோன் 15 வகை கைப்பேசியின் சிறப்பம்சங்கள், கூடுதல் வசதிகள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் சில தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனால், இந்த ஐஃபோன் 15 வகை கைப்பேசியில், மிக வேகமாக சார்ஜ் செய்யும் வசதி, பல புதிய நிறங்கள் என இளைஞர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஐஃபோன் 15 பற்றி கசிந்திருக்கும் சில தகவல்கள்..
ஐஃபோன் 15 வகையில் ஏ15 பையோனிக் சிப் பயன்படுத்தப்பட்டது, பிரோ வகை மாடல்களில் ஏ16 பையோனிக் சிப் பயன்படுத்தப்பட்டது போல, ஐஃபோன் 15 மாடலிலும் அதுபோன்ற பேட்டர்ன் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. இப்படி ஒரு ஆகஸ்ட் மாதத்தை சந்தித்ததே இல்லையாம்!
ஆப்பிள் ஐஃபோன் 15 வகை கைப்பேசி, அதன் தனித்துவமான மாடல்களுக்கு ஏற்ப பல சிறந்த வண்ணங்களில் அறிமுகமாகவிருக்கிறதாம். ஐஃபோன் 15 ப்ரோ மாடலில், அடர் சிவப்பு நிறம் அறிமுகப்படுத்தப்பட்டது போல, ஐஃபோன் 15 மாடலில், பச்சை நிறம் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஃபோன்15 மாடலில், ஆப்பிள் நிறுவனம் 3500 மெஹா ஹர்ட்ஸ் திறன் கொண்ட பேட்டரி மற்றும் 6,000 மெஹா ஹர்ட்ஸ் திறன் கொண்ட போர்டை இணைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், பேட்டரிகளின் ஆயுள் கூடும் என்றும் கூறப்படுகிறது.
கேமராவை எடுத்துக் கொண்டால், மிக முக்கியமான மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஃபோன் 14 ப்ரோ வகை கைப்பேசிகளில் 48 மெகா ஃபிக்சல் சென்சார் கொண்ட கேமரா இணைக்கப்பட்டிருந்தது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஒட்டுமொத்த ஐஃபோன் 15 வகை கைப்பேசிகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த கைப்பேசிகளில் சென்சார் வசதி அப்கிரேட் செய்யப்படலாம்.
அறிமுகப்படுத்தப்படும் தேதி
ஆப்பிள் ஐஃபோன் 15 அறிமுகமாகும் தேதியை ஆப்பிள் நிறுவனமானது இன்று அறிவித்திருக்கிறது. செப்டம்பர் 12ஆம் தேதி இரவு இந்த கைப்பேசி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. எப்போதுமே வழக்கமாக ஆப்பிள் நிறுவனமானது ஐஃபோன் வகைகளை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில்தான் அறிமுகப்படுத்தியிருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து ஏற்கனவே செப்டம்பரில் ஐஃபோன் 15 அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எத்தனை வகைகள்..
ஐஃபோன் 15 வகை கைப்பேசியில் இரண்டு ஐஃபோன் 15 ப்ரோ வகையிலும், இரண்டு ஸ்டான்டர்ட் வகையும் இருக்கலாம். அதாவது ஐஃபோன் 15, ஐஃபோன் 15 பிளஸ், ஐஃபோன் 15 ப்ரோ, ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் என 4 வகைகளில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.