

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் தாளவாடி அருகே, இரண்டு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அவர்களது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மரணமடைந்தவர்கள் சுனு மற்றும் சௌமியா என்பதும், அவர்களது பிள்ளைகள் ஆதி, அதில் என்பதும் தெரிய வந்துள்ளது.
இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிள்ளைகள் இருவரும், தங்களது படுக்கையில், போர்வை போர்த்திய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர். தம்பதி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சௌமியா செவிலியராக பணியாற்றி வந்ததும், அண்மையில் அவருக்கு ரத்தப் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், விபத்தில் சிக்கிய சுனு, முதுகெலும்பில் காயம் ஏற்பட்டு உடல்நிலை பாதித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இருவருக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் பொருளாதார அளவிலும், உடல்நிலை பாதிப்பினால் மன உளைச்சலிலும் இருவரும் இருந்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க.. தனிநபர் கடன் கோரும் முன் 5 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!
வியாழக்கிழமை, இந்த தம்பதி, சௌமியாவின் மருத்துவ சிகிச்சைக்கு உடன் வர வேண்டிய நண்பரை தொலைபேசியில் அழைத்து, இன்று வர வேண்டாம், வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வருமாறு தெரிவித்துள்ளனர். சுனுவின் வீட்டுக்கு அருகே இருக்கும் அவரது தாய், காலையிலிருந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால், வீட்டுக்குள் சென்று பார்த்தபோதுதான் இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.