ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.
தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங்குக்கு எதிராக சனிக்கிழமை அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சஞ்சய் சிங்கின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங் அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிக்க | முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது தென்கொரியா
தொழிலதிபர் தினேஷ் அரோரா ரூ.2 கோடியை மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கின் வீட்டில் வைத்து அவரிடம் கொடுத்தார் என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. சஞ்சய் சிங் இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்.
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு பிறகு, மதுபானக் கொள்கை ஊழல் வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாவது முக்கிய தலைவர் சஞ்சய் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



