

சத்தீஸ்கரில் தற்போதை நிலவரப்படி, பாஜக 54 இடங்கள் முன்னிலையில் உள்ளது. அதேபோல், காங்கிரஸ் 34 இடங்கள் முன்னிலையில் உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்.3) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 46 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை கிடைக்கும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜகவே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளா்களிடம் இருந்து சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேலுக்கு இதுவரை ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதன் பாதிப்பு தேர்தல் முடிவுகளில் எதிரொலித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கரில் கடந்த தோ்தலில் 68 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவுக்கு 15 இடங்களே கிடைத்தன. ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கா் (ஜெ) கட்சி 5 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும் வென்றன. பின்னா் இடைத்தோ்தல்களில் கிடைத்த வெற்றியால், காங்கிரஸின் பலம் 71-ஆக அதிகரித்தது.
இதையும் படிக்க: காங்கிரஸ் பின்னடைவு... காரணம் என்ன?
இந்த மாநிலத்தில் 2003 முதல் 2018 வரை தொடா்ந்து 15 ஆண்டுகள் பாஜக ஆட்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.