ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மத்திய பிரதேச மாநிலத்தின் ராஜ்கார்த் மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த நான்கு வயது சிறுமி மீட்கப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
மஹி எனப் பெயர்கொண்ட சிறுமி, கடந்த செவ்வாய்கிழமை மாலை ஆழ்துளைக் கிணறு ஒன்றிற்குள் விழுந்தார். தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் புதன்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் குழந்தையை மீட்டனர். சிறுமி உடனடியாக பச்சூரில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசெல்லப்பட்டார். 

அங்கு சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், 70கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

உடற்கூராய்வுக்குப்பின் குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com