கேரள பெண் மருத்துவர் தற்கொலை!

கேரள பெண் மருத்துவர் தற்கொலை!

கேரளத்தில் பெண் மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Published on

கேரளத்தில் பெண் மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை பயின்றுவந்த மாணவி ஷஹானா(26). இவர் இங்குள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கிப் படித்துவந்தார். 

இந்தநிலையில், இரவு பணிக்கு வராத நிலையில் ஷஹானா தங்கியிருந்த அறைக்குச் சென்றுபார்த்தபோது அவர் மயங்கிய நிலையிலிருந்தார். இதுகுறித்து உடனே போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஷஹானாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் ஷஹானா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையில் சோதனை செய்ததில் ஷஹானா எழுதியிருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அனைவருக்கும் பணம் தேவை, பணம் எல்லாவற்றையும் வெல்லும் என எழுதியிருந்தார். பின்னர், குடும்பத்தினரை போலீஸார் விசாரித்தனர். 

ஷஹானாவுக்கும், அவரது நண்பருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், மணமகள் வீட்டார் அதிக வரதட்சணை கேட்டுள்ளனர். இதையடுத்து திருண முடிவிலிருந்து அவரது நண்பர் பின்வாங்கியதையடுத்து, மன உளைச்சலில் இருந்த ஷஹானா இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வாக்குமூலத்தின் அடிப்படையில், கல்லூரியில் முதுகலை மருத்துவராக இருக்கும் அவரது நண்பர் ருவைஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com