ரேவந்த் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஹைதராபாத் வந்தடைந்தார்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட ரேவந்த் ரெட்டி, அந்த மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று(வியாழக்கிழமை) பதவியேற்க உள்ளாா். தலைநகா் ஹைதராபாதில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஹைதராபாத் வந்தடைந்தார். அவருக்கு தெலங்கானா காங்கிரஸ் தரப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
முன்னதாக, தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரை ரேவந்த் ரெட்டி புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.