பணி இலக்கை முடிக்காததால் 8 காவலர்களுக்குச் சம்பளம் நிறுத்திவைப்பு!

காவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நிறைவு செய்யாததால் அவர்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை.
கோப்புப் படம் | ENS
கோப்புப் படம் | ENS
Updated on
1 min read

அகர்தலா: திரிபுரா மாநிலம் சிபாஹிஜாலா மாவட்டத்தைச் சேர்ந்த 8 காவலர்களுக்கு இந்த மாதத்துக்கான பணி இலக்குகளை (டார்கெட்) முடிக்காததால் அவர்களுக்கான சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 3 உதவி துணைக் கண்காணிப்பாளர்கள் ஆகிய 8 பேர், கடந்த மூன்று மாதங்களாக முடிக்க வேண்டிய வழக்குகளைத் தீர்க்கவில்லை.

ஆகவே, காவல் உயர்கண்காணிப்பாளர் பிஜே ரெட்டி, வழக்கு தீர்த்து வைப்பதில் அலட்சியம் மற்றும் உயரதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ச்சியாக மீறிய காரணங்களுக்காக அவர்களின் சம்பளத்தை நிலுவையில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

18 வழக்குகள் டார்கெட் ஆகக் கொடுக்கப்பட்ட நிலையில் 3 வழக்குகளை மட்டுமே இந்தக் காவலர்கள் தீர்த்துள்ளனர்.

வங்க தேசத்தோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தப் பகுதியில் அடிக்கடி, போதை மருந்து கடத்தல், மனிதக் கடத்தல் உள்ளிட குற்றங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com