

காசி தமிழ்ச் சங்கமம் 2-ஆம் கட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க டிசம்பர் 17, 18ல் பிரதமர் மோடி வாராணசிக்குச் செல்லவிருக்கிறார்.
பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாராணசிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார். இவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கக் காசி பகுதி பாஜக பிரிவு ஆயத்தமாகியுள்ளது. காசியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்வார் என பாஜக தலைவர் திலீப் சிங் படேல் கூறியுள்ளார்.
மோடி தனது பயணத்தின் முதல் நாளில், கட்டிங் மெமோரியல் இன்டர் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை கண்காட்சியைப் பார்வையிடுகிறார்.
இதையும் படிக்க| 12 ராசிக்குமான வாரப் பலன்கள்!
அதன்பிறகு, டிசம்பர் 17-ல் தொடங்கும் காசி தமிழ்ச் சங்கமம் 2-ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாக கலாசார நிகழ்ச்சி நடைபெற உள்ள நமோ காட் பகுதிக்குச் செல்கிறார்.
டிசம்பர் 18-ல் வாராணசியில் உள்ள ஸ்வர்வேட் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பிறகு தனது நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் இறுதி செய்யப்பட்டு வருகிறது. இது வாராணசியில் உள்ள சேவாபுரி பகுதியில் நடைபெற வாய்ப்புள்ளது. பிரதமர் மோடிக்கு காசி பகுதி பாஜக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் என்று படேல் கூறினார்.
இதையும் படிக்க| தில்லி கலால் கொள்கை: பினோய் பாபுவுக்கு ஜாமீன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.