12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிச.8 - டிச.14) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
12 ராசிக்குமான வாரப் பலன்கள்!
Published on
Updated on
3 min read

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (டிச.8 - டிச.14) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.  எதிர்ப்புகள் குறையும். பொருளாதாரத்தில்  முன்னேற்றம் உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி நிறையும். உத்தியோகஸ்தர்களுக்கு நிலவிவந்த தொல்லைகள் குறையும்.  வியாபாரி
களுக்கு வாடிக்கையாளர்களிடம் ஆதரவு பெருகும். விவசாயிகளுக்கு பாசன வசதிகள் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும்.  கலைத் துறையினருக்கு  நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களின் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் பின்தங்கியவர்களுக்கு உதவி செய்து 
மகிழ்வீர்கள்.

சந்திராஷ்டமம் - டிச. 11,12.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

சிறிய அலைச்சல்கள் உண்டாகும்.  எவரையும் நம்பி வாக்கு கொடுக்க வேண்டாம். வருமானம் குறைவாக இருந்தாலும், குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.  எடுத்த காரியத்தை முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரை எடுப்பீர்கள். வியாபாரிகள் கவனமாக இருப்பீர்கள். விவசாயிகள் உப தொழில்களில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகள் செயல்களில் கவனம் தேவை. கலைத் துறையினர் வெற்றியைப் பெறுவீர்கள். பெண்கள் நண்பர்களிடம் உதவியைப் பெறுவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம் - டிச. 13, 14.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

கடன் வசூலாகும். பங்குச் சந்தை வியாபாரத்திலும் பலன் கிடைக்கும். உடனிருப்போருக்கு உதவுவீர்கள்.  தன்னம்பிக்கையும் தனித்திறனும் வெளிப்படும்.  

உத்தியோகஸ்தர்கள் பிறரால் பிரச்னைகளைச் சந்திப்பீர்கள். வியாபாரிகள் புதிய உத்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் பெறுவீர்கள்.

அரசியல் வாதிகளுக்கு கட்சியில் நற்பெயர் உண்டாகும். கலைத் துறையினர் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பெண்களுக்கு ஆடம்பரப் பொருள்கள் கைவந்து சேரும். மாணவர்கள் விளையாட்டுகளில் பரிசுகளைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தினரிடம் அனுசரித்து நடப்பீர்கள். பெருமைகளை வெளியில் சொல்ல வேண்டாம். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். தொழிலில் மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு ஆதரவு பெருகும். விவசாயிகள் பணியாளர்களை அரவணைத்துச் செல்வீர்கள். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சி
யினரின் ஆதரவையும் பெறுவீர்கள். கலைத் துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். பெண்கள் புதிய பொருள்களை வாங்குவீர்கள்.  மாணவர்களுக்கு ஆதரவு பெருகும்.
சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

உடல் உபாதைகள் குணம் அடையும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். சொத்துகளில் பாகப் பிரிவினை நடக்கும்.  கடன் வசூலாகும்.  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். வியாபாரிகள் வியாபாரத்தில் கவனமாக இருப்பீர்கள். விவசாயிகள் கொள்முதலில் 
நிரந்தரத்தைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணியில் முமு மூச்சுடன் இருப்பார்கள். கலைத் துறையினர் ரசிகர்களின் மனம் அறிந்து செயல்படுவீர்கள். பெண்கள்ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்களின் மனக் குழப்பம் நீங்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

விவேகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வழக்குகளில் சாதகமான சூழல் உருவாகும். உத்தியோகஸ்தர்கள் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் பண நடமாட்டம் சிறக்கும். விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு கட்சியில் உயரும். கலைத் துறையினருக்கு புதிய நட்புகள் உருவாகும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் செலுத்தி மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

சந்திராஷ்மம் -இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

தொழிலை விரிவுபடுத்த வெளியூர் சென்று வருவீர்கள். வருமானம் படிப்படியாக உயரும்.  கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிரமப்படுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடன் பெறுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்த சிரமப்படுவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க மாட்டீர்கள். அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. கலைத் துறையினர் ரசிகர்களைக் கௌரவப்படுத்துவீர்கள்.  பெண்கள் குடும்பத்தினரின் மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

எடுத்த காரியங்களை வென்று முடிப்பீர்கள். கடன் வசூலாகும்.  பொருளாதார நிலை மேம்படும்.  பங்குச் சந்தையில் வருவாய் கிடைக்கும்.  இல்லத்தில் திருமண முயற்சிகள் கை கூடும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டு வியாபாரத்தில் பங்கு கிடைக்கும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்னையால் வருத்தம் அடைவீர்கள். கலைத் துறையினர் 
ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் ந ண்பர்களிடம் உதவிகளைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தினர் மனமறிந்து நடப்பார்கள். எதிர்காலத்துக்கு பணம் சேர்ப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வங்கிக் கடன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். வியாபாரிகள் குழப்பங்களைச் சிரமப்பட்டு களைவீர்கள்.  விவசாயிகள் பிறரின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.  கலைத் துறையினர் பிறருக்கு ஆலோசனைகளை அளிப்பீர்கள். பெண்கள் நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவர்கள் சோம்பறித்தனத்தை விடுத்து படிப்பில் அக்கறை செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உறவினர்களின் மனத்தாங்கலை அகற்றுவீர்கள். தொழில் போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள்.  பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள்.  மதிப்பும் மரியாதையும் உயரும். 
உத்தியோகஸ்தர்களுக்கு பணிச் சுமை குறையும். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். 

விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். அரசியல்வாதிகள் கவனமாகப் பேசவும். கலைத் துறையினரின் பொருளாதார நிலை சிறக்கும். பெண்கள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவர்கள் பெற்றோர் பேச்சை கேட்டு நடப்பீர்கள். 

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வருமானம் அதிகரிக்கும்.  பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள்.  திறமையை வெளிப்படுத்துவீர்கள். வீடு, வாகனங்களுக்குச் செலவு செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளைச் சுலபமாகச் செய்வீர்கள். 

வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகள் இடுபொருள்களுக்குச் செலவு செய்வீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

கலைத் துறையினர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சிப்பீர்கள். பெண்களுக்கு ஆன்மிகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் - டிச. 8

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தொழிலை லாபம் குறையாமல் நடத்துவீர்கள். அரசு சலுகைகள் கிடைக்கும். பிறருக்கு உதவுவீர்கள். குழந்தைகளின் வளர்ச்சியில் பெருமை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வு கிடைக்கும். 

வியாபாரிகளுக்கு யோகம் உண்டு. விவசாயிகள் அதிக விளைச்சலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் கடமையாற்றுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையொப்படுவீர்கள்.

பெண்கள் குலதெய்வப் பிரார்த்தனைகளைச் செய்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் - டிச. 9,10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com