நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பல சிரமங்களை சந்திக்கும்: சஞ்சய் ரௌத்

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பல சிரமங்களை சந்திக்கும்: சஞ்சய் ரௌத்

காந்தி குடும்பத்தைச் சுற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதகமான அரசியல் செய்பவர்கள் இருந்தால், காங்கிரஸ் வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பல சிரமங்களை சந்திக்குமென சிவசேனைத் தலைவர் சஞ்சய் ரௌத்.
Published on

காந்தி குடும்பத்தைச் சுற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதகமான அரசியல் செய்பவர்கள் இருந்தால், காங்கிரஸ் வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பல சிரமங்களை சந்திக்குமென சிவசேனைத் தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீதும் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தபால் வாக்குகளை எண்ணும்போது 199 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. ஆனால், மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்போது சூழ்நிலையே தலைகீழாக மாறிவிட்டது. காந்தி குடும்பத்தைச் சுற்றி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சாதகமான அரசியல் செய்பவர்கள் இருந்தால், காங்கிரஸுக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல் மேலும் ஆபத்தானதாக இருக்கும்.

மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல் நாத், மோடியின் மந்திரம்  மூன்று மாநிலங்களில் வேலை செய்துள்ளது. ஆனால், தெலங்கானாவில் இல்லை எனக் கூறுகிறார். பிரதமர் மோடியை காங்கிரஸால் தோற்கடிக்க முடியாது என்பதும் கட்டுக்கதை. கடந்த காலங்களில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர்  மற்றும் ராஜஸ்தானில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com