மக்களவையில் வீசப்பட்ட வண்ணப் புகைக் குப்பிகள் ஆபத்தானதா?

நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் அத்துமீறிய நபர்கள் வண்ணப் புகைக் குப்பிகள் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மக்களவையில் வீசப்பட்ட வண்ணப் புகைக் குப்பிகள் ஆபத்தானதா?

நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் அத்துமீறிய நபர்கள் வண்ணப் புகைக் குப்பிகள் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவையில் புதன்கிழமை பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞா்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவா் தாக்குதல் நடத்தினா்.

இவா்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினா் கைது செய்து தில்லி போலீஸிடம் ஒப்படைந்தனா். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் நாடாளுமன்றத்துக்குள் வீசப்பட்ட வண்ணப் புகைக் குப்பிகள் நச்சுத்தன்மையற்ற சாதாரண குப்பிகள் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா புதன்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் இருந்து 5 புகைக் குப்பிகளை ரூ.1,200-க்கு போராட்டக்காரர்கள் வாங்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைக் குப்பிகள் என்றால் என்ன?

புகைக் குப்பிகளை பொறுத்தவரை நச்சுத்தன்மை கலந்ததும், நச்சுத்தன்மை இல்லாததும் உள்ளன.

நச்சுத்தன்மை இல்லாத புகைக் குப்பிகள் பிறந்த நாள், திருமண நாள் போன்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. இவை வண்ணம் கலந்தும் பயன்படுத்தப்படுகிறது.

நச்சுத்தன்மை உள்ள புகைக் குப்பிகள் போராட்டக்காரர்களை கலைப்பதற்காக காவலர்களும், ஊடுருவி செல்வதற்காக ராணுவத்தினரும் பொதுவாக பயன்படுத்துகின்றனர்.

பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் என்ன?

புகைக் குப்பிகளில் அடிப்படையாக புகையை உருவாக்கக்கூடிய பொட்டாசியம் நைட்ரேட், சோடியம் பைகார்பநேட் உள்ளிட்ட வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. வண்ணப் புகைக் குப்பிகளில் கூடுதலாக நிறத்தை உண்டாக்குவதற்காக ஹெர்பல் கலர் உபயோகிக்கப்படுகிறது.

போராட்டக்காரர்களை கலைப்பதற்காக காவலர்கள் உபயோகிக்கும் புகைக் குப்பிகளில் ஜின்க் குளோரைடு, ஜின்க் ஆக்சைடு உள்ளிட்ட ரசாயனங்கள் கண் எரிச்சலை உண்டாக்குவதற்காக சேர்க்கப்படுகிறது. இந்த குப்பிகளால் தோல் பிரச்னை, சுவாசப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவர்கள் வீசப்பட்ட குப்பிகளில் வேறு ஏதேனும் ஆபத்தான ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வல்லுநர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com