நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

நாடாளுமன்றத்தில் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்!

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2023, 9:55 am IST


நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களவையில் புதன்கிழமை பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞா்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவா் தாக்குதல் நடத்தினா்.

இவா்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினா் கைது செய்து தில்லி போலீஸிடம் ஒப்படைந்தனா். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றம் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் 22-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் நடந்த இந்தத் தாக்குதல் திட்டத்தை 6 நண்பா்கள் இணைந்து செயல்படுத்தியது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல கட்ட சோதனைகளை தாண்டி மக்களவைக்குள் புகைக் குப்பிகளை இருவர் கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த எம்பிக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சில உத்தரவுகளை வெளியிட்டுள்ளார்.

இன்றுமுதல் மறுஅறிவிப்பு வரும்வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர் மாடத்தில் இருந்து அவைக்குள் குதிப்பதை தடுக்கும் வகையில் கண்ணாடி தடுப்புகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதன்மை வாயிலில் எம்பிக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தனி வாயிலில் அனுமதிக்கப்படவுள்ளனர்.

மத்திய அமைச்சர்களை தவிர, பிற எம்பிக்களின் உதவியாளர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் வருவதற்கு இனி அனுமதி இல்லை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையங்களில் இருப்பது போன்று முழு உடலை ஸ்கேன் செய்யும் அதிநவீன இயந்திரங்களை நாடாளுமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.