உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மருங்காபுரி பகுதியில் நவீன குளிர்பதனக் கிடங்கு: ஜோதிமணி எம்.பி. கோரிக்கை

மருங்காபுரி பகுதியில் நவீன குளிர்பதனக் கிடங்கு அமைத்துத் தருமாறு கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தி இருப்பது தொடர்பாக....

MP Jothimani requests the establishment of a modern cold storage

மருங்காபுரி பகுதியில் நவீன குளிர்பதனக் கிடங்கு அமைத்துத் தருமாறு உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் பி. வெங்கடரமணை சந்தித்து மனு அளித்த கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி. - எக்ஸ்

Published On :

மருங்காபுரி பகுதியில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நவீன குளிர்பதனக் கிடங்கு அமைத்துத் தருமாறு உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் பி. வெங்கடரமணை சந்தித்து கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் பி. வெங்கடரமணனை சந்தித்து, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள், அதற்குத் தேவையான கட்டடங்கள் மற்றும் மருங்காபுரி பகுதியில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நவீன குளிர்பதனக் கிடங்கு அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்தேன்.

இந்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, இந்த நிதியாண்டிலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். அதற்காக அவருக்கு கரூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திப்பின்போது, அமைச்சர் "அண்ணாவின் மாபெரும் தமிழ்க் கனவு" நூலை அன்புடன் பரிசளித்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

Summary

MP Jothimani requests the establishment of a modern cold storage facility in the Marungapuri area

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.