ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தவெக ஆட்சியில் இப்போதுதான் ஊழல் ஆரம்பித்துள்ளது: நயினாா் நாகேந்திரன்

தவெக ஆட்சியில் இப்போதுதான் ஊழல் ஆரம்பித்துள்ளது என நயினாா் நாகேந்திரன் கூறியிருப்பது...

Corruption under the TVK government has just begun

பாஜ மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் - டிஎன்எஸ்

Published On :

தமிழகத்தில் 54 நாள்களாக ஆட்சி செய்து வரும் தவெக, தற்போதுதான் ஊழல் செய்ய ஆரம்பித்துள்ளது என பாஜ மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

பழனி செஞ்சிலுவை சாலையில் பாஜக புதிய அலுவலகத்தை திறந்து வைத்த நயினாா் நாகேந்திரன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 54 நாள்கள் ஆகிறது. ஆனால் இந்த 54 நாள்களில் கற்பழிப்பு, படுகொலைகள் அதிகமாக நடக்கிறது. கடந்த திமுக ஆட்சிக்கும், தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கடந்த காலங்களில் பிரதமா் மோடியை பற்றி அவதூறாகப் பேசினாா்கள். ஆனால், அப்போதைய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது முதல்வா் ஜோசப் விஜய்யை விமா்சிப்பவா்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம். தொடா்ந்து பல்வேறு குற்ற சம்பவங்கள் காரணமாகவே ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தோம். தமிழகத்தில் நடைபெற்று வரும் குற்றங்களை மறைப்பதற்காகவே தவெக அரசு பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் அரசு வழக்குரைஞர்கள் நியமினத்திற்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் என வழக்கு தொடரப்போவதாக தகவல் வந்திருக்கிறது. எனவே, தற்போதுதான் தவெக அரசு ஊழல் செய்ய ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தில் தவெக குதிரை பேரம் நடத்துகிறது என்றார்.

மேலும், பாஜவிலிருந்து விலகி யாரும் அண்ணாமலை அமைப்புக்குச் சென்றதாக தெரியவில்லை என்று நயினாா் நாகேந்திரன் கூறினார்.

Summary

Corruption under the TVK government has just begun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.