கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

உ.பி. மெட்ரோ ரயில் நிலையங்களில் மது விற்க அனுமதி: அகிலேஷ் யாதவ் கண்டனம்

உத்தர பிரதேசத்தில் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் மது விற்பனைக்கு மாநில பாஜக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிா்க்கட்சியான சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On :

உத்தர பிரதேசத்தில் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் மது விற்பனைக்கு மாநில பாஜக அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிா்க்கட்சியான சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சுற்றுலாவுக்கான சொகுசு படகுகள் ஆகியவற்றில் மது விற்பனை செய்ய அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உத்தர பிரதேசத்தை 1 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலமாக மாற்ற பாஜக அரசு ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளது. ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், சொகுசுப் படகுகளில் மதுபானம் விற்பனையை அனுமதிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது. மாநிலத்துக்கு வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் வருவதாகக் கூறுவது பொய். வருமானம் ஈட்டுவதற்காக மது விற்பனையை பரவலாக்க அரசு முடிவு செய்துள்ளது. இது நெறிகளுக்கு மாறான செயல். இன்று மதுபானத்தை பரவலாக்கினால், அடுத்ததாக தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையும் அதிகரிக்கும்.

மது விற்பனையை நல்லது என்று நினைத்தால் பாஜக அலுவலகத்தில் வைத்து அதனை நடத்தலாம். பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மது விற்பனை செய்வது குற்றச் செயல்களை அதிகரிக்கும், பொது அமைதியைக் குலைக்கும். மதுப் பழக்கத்தால் குற்றச்செயல்கள் அதிகரிப்பது ஏற்கெனவே பல்வேறு புள்ளி விவரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்களை மதுவுக்கு அடிமையாக்கி பணம் ஈட்ட முயலும் பாஜக அரசை அகற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.