ராகுல் காந்தி- ஒரு தலைவர் இல்லை : லக்ஷ்மன் சிங்

ராகுல் காந்தி மற்ற எம்.பிக்களைப் போல காங்கிரஸின் ஒரு உறுப்பினர், அவ்வளவுதான்.
ராகுல் காந்தி- ஒரு தலைவர் இல்லை : லக்ஷ்மன் சிங்

போபால்: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. லக்ஷ்மன் சிங், ராகுல் காந்தி ஒரு சாதாரண காங்கிரஸ் ஊழியர் மற்றும் எம்.பி. அவரை அவ்வளவாக முன்னிலைப்படுத்த வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் திக்விஜய சிங்கின் தம்பி லக்ஷ்மன் சிங், சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசும்போது அவர் முகம் தொலைகாட்சிகளில் குறைவாகக் காண்பிக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது லக்ஷ்மன் சிங், “ராகுல் காந்தி ஒரு எம்.பி, அவர் காங்கிரஸ் தலைவர் கிடையாது. ஒரு தொண்டர் மட்டுமே. அதனை தவிர்த்துவிட்டால் அவர் ஒன்றும் இல்லை. நீங்கள் அவரைப் பெரிதுபடுத்துவதே இல்லை. நாங்களும் அதை செய்வதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மற்ற எல்லா எம்.பிக்களையும் போல காங்கிரஸின் ஒரு உறுப்பினர், அவ்வளவுதான் எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், ”ஒருவர் பிறப்பால் தலைவராவதில்லை, தனது செயல்களின் மூலம்தான் தலைவராகிறார். ராகுல் காந்தியைத் தலைவராக கருத வேண்டியதில்லை. நான் அப்படி கருதுவதில்லை. அவர் ஒரு எம்.பி. நீங்கள் பெரிதுபடுத்துகிறீர்களா இல்லையா என்பது முக்கியமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த மத்திய பிரதேச தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் லக்ஷ்மன் சிங் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com