கார் தீப்பிடித்து எரிந்ததில் கணவர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி மாவட்ட மருத்துவமனைக்கு அருகில் உடல் கருகி இறந்த சம்பவம் கேரளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பிரிஜித் (35 வயது) மற்றும் அவரது மனைவி ரீஷா (26 வயது) என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் கேரளத்தின் குட்டியத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். ரீஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிக்க: 23 வயதில் இத்தனை சாதித்திருக்கிறாரா ஷுப்மன் கில்?
கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயினை அணைத்து பிரிஜித் மற்றும் ரீஷாவினை காரிலிருந்து மீட்டனர். இருப்பினும், கணவன் மற்றும் மனைவி என இருவருமே ஏற்கனவே இறந்து விட்டனர்.
காரில் மொத்தம் ஒரு குழந்தை உட்பட 6 பேர் பயணம் செய்துள்ளனர். குழந்தை மற்றும் 3 பேர் காரில் பின்னால் அமர்ந்து வந்துள்ளனர். பிரிஜித் மற்றும் ரீஷா முன்னாள் அமர்ந்துள்ளனர். காரில் தீப்பற்றியவுடன் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் காரிலிருந்து இறங்கி தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காயங்கள் ஏதும் இல்லை.
இதையும் படிக்க: ’வாரிசு’ ஓடிடி வெளியீடு எப்போது?
இவர்கள் அனைவரும் பயணம் செய்த கார் 2020 ஆம் ஆண்டு மாடல் மாருதி எஸ் பிரஸ்ஸோ எனத் தெரிகிறது. காரில் தீப்பற்றியதால் முன்னால் இருந்த காரின் கதவுகளை அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால், கணவன் மற்றும் மனைவி என இருவரும் காருக்குள்ளேயே சிக்கி உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்பட்டப் பகுதியில் உள்ள மக்கள் எந்த நேரத்திலும் காரின் ஆயில் டேங்க் வெடிக்கும் அபாயம் இருந்ததால் காருக்கு அருகில் சென்று காப்பாற்றும் முயற்சியில் பெரிதாக ஈடுபடவில்லை எனத் தெரிகிறது. காரில் திடீரென தீப்பற்ற காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர்!

சூறையாடப்பட்ட திரிணமூல் அலுவலகம்! பாஜக தொண்டர்கள் அட்டூழியம்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடவிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட்!

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

