எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்த மோசடி குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஒத்திவைப்புத் தீா்மானத்தைத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டன. 

இதையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சியினர் இன்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com