ஒவ்வொரு குழந்தைக்கும் அடையாளமாகத் தனி மெட்டு! எங்கே தெரியுமா?

மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் உள்ள ஒரு கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மெட்டு போடப்படுகிறது. 
ஒவ்வொரு குழந்தைக்கும் அடையாளமாகத் தனி மெட்டு! எங்கே தெரியுமா?

வாழ்நாள் முழுவதும் ஒரு பரிசைப் பெறுவது எவ்வளவு அதிர்ஷ்டம்! ஆம், நம் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மெட்டு போடப்படுகிறது. அந்த ஒரு மெட்டு அந்த ஒரு குழந்தைக்கானது மட்டுமே என்பது சிறப்புத் தகவல். 

வடகிழக்கு இந்தியாவில் மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து மூன்று மணி நேர பயணத் தொலைவில் உள்ளது காங்தாங் என்றொரு கிராமம். 

இங்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பிரத்யேக மெட்டு உருவாக்கப்படுகிறது. ஜிங்ர்வாய் ஐயாவ்பேய் (மூதாதையரின் நினைவாக பாடல்) என்று அழைக்கப்படும் இந்த பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருவது இதன் சிறப்பு. 

விசில் அடிப்பதைப் போன்ற அந்த மெல்லிசை அந்த குழந்தையின் அடையாளமாகிறது. மெட்டிற்கேற்ப குழந்தைக்கும் பெயர் சூட்டுகிறார்கள். அதிகாரப்பூர்வ பதிவுகளுக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது. 

இந்த தனித்துவமான மெட்டு சில வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரை இருக்கும். தாய் குழந்தையின் மீதான அன்பை வெளிப்படுத்தும் மெட்டாக இது பார்க்கப்படுகிறது. குழந்தை மீதான தாயின் காதல் பாடல் இது. ஒரு குழந்தைக்கான மெட்டு மற்றொரு குழந்தைக்கு இருக்காது என்பதால் தனித்துவமான இந்த மெட்டுகள் ஆச்சரியப்படுத்துகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com