போர் வீரர்களை உருவாக்கி அனுப்பும் கிராமம்! தமிழ்நாட்டில்தான்!!

இந்திய ராணுவத்தில் சேருவதற்காக தருமபுரி இளைஞர்களுக்குத் தன்னுடைய தள்ளாடும் வயதிலும் பயிற்சி அளித்து வருகிறார் முன்னாள் ராணுவ வீரரான என். மாரிமுத்து.
போர் வீரர்களை உருவாக்கி அனுப்பும் கிராமம்! தமிழ்நாட்டில்தான்!!

இந்திய ராணுவத்தில் சேருவதற்காக தர்மாபுரி இளைஞர்களுக்குத் தன்னுடைய தள்ளாடும் வயதிலும் பயிற்சி அளித்து வருகிறார் முன்னாள் ராணுவ வீரரான என். மாரிமுத்து. தேசத்துக்கு சேவையாற்றுவதே தனது ஒரே நோக்கம் என்று குறிப்பிடுகிறார். 

இந்திய ராணுவத்தில் சேருவதற்கு இளைஞர்களுக்கு உடல் மற்றும் எழுத்துத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கிறார்.

தர்மாபுரியில் முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கத்தின் தலைவராக இருக்கும் இவர், ஆயுதப்படையில் சேருவதற்கு கிராம மக்கள் எப்போதும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், தேனி மாவட்டம்  தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி, சுருளி தேவர் ஆகியோர் ஆங்கிலேயர்களுடன் போரிட, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தபோது இந்த கிராமத்தில் இந்த ஆர்வம் ஏற்பட்டதாகவும் சுதந்திரத்திற்குப் பிறகு, கிராம மக்கள் இந்திய ராணுவத்தில் சேர வரிசையில் நிற்கத் தொடங்கியதாகவும் கூறுகிறார்.

மேலும், இங்குள்ள மக்கள் தர்மாபுரியின் படை வீரர்களை காளியம்மன்  தெய்வம் காப்பதாக நம்புகின்றனர். 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் படைகளில் இணைந்துள்ளனர்.

ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தபோதும் இவர்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லாத நிலையில்தான் மாரிமுத்து முன்வந்தார். 

1979 ஆம் ஆண்டு தனது 17-வது வயதில் ராணுவப் படையில் இணைந்த இவர், உள்ளூர் பள்ளிகளுக்குச் சென்று தன்னுடைய ராணுவ அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ராணுவத்தில் சேர எப்படி விண்ணப்பிப்பது, என்ன பயிற்சி எடுப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்குகிறார். அத்துடன் எழுத்து மற்றும் உடல் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறார். இதற்காக அவர் தற்காலிக பயிற்சி அரங்கம் அமைத்துள்ளார். 

தர்மாபுரியில் இருந்து மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞர்கள் பயிற்சிக்காக இங்கு வரத் தொடங்கியுள்ளனர். ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்கு 100 ரூபாய் வசூலிக்கிறேன். பயிற்சி காலை 5 மணிக்கு தொடங்குகிறது, இங்குள்ள ஆசிரியர்கள் அவர்களை எழுத்துத் தேர்வுக்கு தயார்படுத்துகிறார்கள். இந்திய ராணுவத்தில் சேர 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு உதவியுள்ளேன். 20-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு காவல் பணியில் சேர்ந்துள்ளனர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com