முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை மருத்துவமனையில் சந்தித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நலம் விசாரித்தார்.
கேரள மாநிலம், நெய்யாட்டின்கராவில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பிப்ரவரி 7 திங்கள்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அவரை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து நலம் விசாசித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முதல்வர் பினராயி விஜயன் உத்தரவின்படி, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். ஏற்கெனவே முதல்வர், உம்மன் சாண்டியின் மகனை நேற்று அழைத்து அவரது மகள் மற்றும் மருத்துவர்களைச் சந்தித்தார்.
மருத்துவமனையில் டாக்டர் மஞ்சு தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளிக்கும் என்றார். இதனிடையே உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் தனது முகநூல் பதிவில், தனக்கு நிமோனியா லேசாக ஆரம்பமாகி இருப்பதாகவும், அதிக காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் முதல்வர் பினராயி விஜயன், நேரில் அழைத்து உம்மன் சாண்டியின் உடல்நிலை குறித்து விசாரித்ததற்கு அவர் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாங்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

29 ஸ்ரீபெரும்புதூா்

விபத்தில் உயிரிழந்த துப்புரவுப் பணியாளருக்கு இஎஸ்ஐ ஓய்வூதியம்

டெல்டா மாவட்டங்களில் திமுக கூட்டணி 13, அதிமுக 3, தவெக 2 தொகுதிகளில் வெற்றி
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


