மறைந்த தாத்தாவின் ஆசைக்காக.. ஹெலிகாப்டரில் நடந்த திருமண ஊர்வலம்!

மத்தியப் பிரதேசத்தில் தாத்தாவின் ஆசைக்காக உறவினர்கள் இருவர் ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலத்தை நடத்திய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
மறைந்த தாத்தாவின் ஆசைக்காக.. ஹெலிகாப்டரில் நடந்த திருமண ஊர்வலம்!


போபால்: மத்தியப் பிரதேசத்தில் தாத்தாவின் ஆசைக்காக உறவினர்கள் இருவர் ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலத்தை நடத்திய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலிலுள்ள குரானா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹெம் மன்ட்லோய், யாஷ் மன்ட்லோய். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான இவர்கள், தங்கள் தாத்தாவின் ஆசைப்படி தங்களின் திருமண ஊர்வலத்தை ஹெலிகாப்டரில் நடத்தியுள்ளனர். 

போபாலிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஷாஜபூர் மாவட்டத்திலுள்ள ஷுஜால்பூர் பகுதி வரை ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் நடைபெற்றது.  

வித்தியாசமான முறையில் நடைபெற்ற இந்த திருமண ஊர்வலத்தைப் பார்க்க ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்திருந்தனர். 

இது தொடர்பாக பேசிய மணமகன், ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலத்தை நடத்தி மணமகளை அதில் அழைத்து வர வேண்டும் என்பது என் தாத்தாவின் ஆசை. அவர் இப்போது இந்த பூமியில் இல்லை. ஆனால், அவரின் ஆசையை எனது தந்தை நிறைவேற்றியுள்ளார். இனி ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் நடத்துவது எங்கள் குடும்பத்தின் வழக்கமாக நாங்கள் பின்பற்றவுள்ளோம். எங்கள் குழந்தைகளின் திருமண ஊர்வலமும் ஹெலிகாப்டரில் நடத்துவோம். இதனால், எங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் எனக் குறிப்பிட்டார். 

இந்த குடும்பத்தில் ஹெலிகாப்டரில் திருமண ஊர்வலம் நடத்துவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு இந்த குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரரின் திருமண ஊர்வலமும் ஹெலிகாப்டர் கொண்டு நடத்தப்பட்டது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த ஹெலிகாப்டர் ஊர்வலம் மாடனா கிராமத்திலிருந்து ஷாஜபூர் வரை நடைபெற்றது. 

இந்த குடும்பத்தின் முக்கிய வருவாய் விவசாயமாக உள்ளது. ஹெலிகாப்டர் திருமண ஊர்வலத்துக்காக மட்டும் 5 முதல் 6 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com