

புது தில்லி: பிபிசி அலுவலகத்தில் வருமான வரித் துறை நடத்தும் சோதனையானது ஒரு மிரட்டும் செயல் என்று விமரிசித்துள்ள காங்கிரஸ் கட்சி, விமரிசனங்களுக்கு மத்திய அரசு பயப்படுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், தில்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருவது, மோடி தலைமையிலான மத்திய அரசு விமரிசனங்களைக் கண்டு பயப்படுவதைத்தான் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மிரட்டும் வகையில் மத்திய அரசு செயல்படும் விதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த ஜனநாயகமற்ற மற்றும் சர்வாதிகாரப் போக்கை இனியும் தொடர முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.
பிபிசியின் மும்பை மற்றும் தில்லி அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.