'இதேநிலை தொடர்ந்தால் நாட்டில் எந்த ஊடகமும் இருக்காது'

இதேநிலை தொடர்ந்தால் நாட்டில் எந்த ஊடகமும் இருக்காது என பிபிசி நிறுவனத்தில் வருமானவரித் துறை ஆய்வு குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மம்தா பானர்ஜி
முதல்வர் மம்தா பானர்ஜி

இதேநிலை தொடர்ந்தால் நாட்டில் எந்த ஊடகமும் இருக்காது என பிபிசி நிறுவனத்தில் வருமானவரித் துறை ஆய்வு குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக ‘இந்தியா: தி மோடி க்வஸ்டீன்’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை பிபிசி அண்மையில் வெளியிட்டது. அந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், இந்த ஆவணப்படம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நிலுவையில் இருந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தில்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து 2-வது நாளாக அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிபிசி நிறுவனத்தில் வருமானவரித்துறை ஆய்வு குறித்து எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான  மம்தா பானர்ஜி, 'இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அரசியல் பழிவாங்கலுடன் பாஜக ஆட்சியை நடத்தி வருகிறது. இது பத்திரிகை சுதந்திரத்தை மட்டும் பாதிக்காது,.

இதே நிலை தொடர்ந்தால் நாட்டில் எந்த ஊடகமும் இருக்காது. ஊடகங்கள் ஏற்கனவே அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. ஊடகங்களால் குரல் எழுப்ப முடியாது' என்று கருத்து கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com