'வகுப்பில் பாகுபாடு..' ஐஐடி மாணவர் தற்கொலைக்குக் காரணம் கூறும் பெற்றோர்!

மும்பை ஐஐடியில் சக மாணவர்கள் வகுப்பறையிலிருந்து ஒதுக்கியதே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணமாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

மும்பை ஐஐடியில் சக மாணவர்கள் வகுப்பறையிலிருந்து ஒதுக்கியதே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணமாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 

மும்பை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் தற்கொலைக்கான காரணத்தை அவரின் பெற்றோர்கள் காவல் துறையிடம் தெரிவித்துள்ளனர். 

ஐஐடியில் சக மாணவர்கள் வகுப்பறையில் ஒதுக்கியதால் மனமுடைந்து தனது மகன் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.  

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரும் ஐஐடியில் பிப்ரவரி 13ஆம் தேதி 18 வயதான முதலாமாண்டு மாணவர் வளாகத்தின் 7வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவரின் தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவரின் விடுதி அறையில் தற்கொலைக்கான எந்தவித காரணங்களும் கண்டறியப்படவில்லை. 

மாணவர் இறப்புக்கு ஒரு நாள் முன்பு தேர்வு முடிந்திருந்ததால், கல்வியின் அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில், மாணவரின் தற்கொலைக்கு ஐஐடியில் நிலவிய பாகுபாடே காரணம் என பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தொலைப்பேசியில் பேசும்போது தனது சகோதரியிடமும், அத்தையிடமும் சாதி ரீதியாக ஒதுக்கப்படுவதாக மாணவர் புலம்பியுள்ளார். 

இது தொடர்பாக பேசிய மாணவரின் சகோதரி ஜான்வி சோலன்கி , கடந்த மாதம் வீட்டிற்கு வந்தபோது, ஐஐடியில் சாதிய ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாக என்னிடமும், என் அம்மா, அப்பாவிடமும் அவன் வருந்தினான். சாதி குறித்து அறிந்துகொண்டதால், உடன் படித்த நண்பர்களின் நடத்தையிலும் மாற்றங்கள் இருந்ததாகக் கூறினான். நண்பர்கள் உடன் சாப்பிடுவதையும், உடன் வெளியே செல்வதையும் தவிர்த்துவிட்டதாக வருத்தப்பட்டான் எனக் குறிப்பிட்டுள்ளார். 

எனது மகன் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தொடர் தொந்தரவால் அவன் தற்கொலை செய்துகொண்டதாகவும் மாணவரின் தாயார் தர்லிகாபென் சோலன்கி தெரிவித்துள்ளார். 

மேலும், ஐஐடியில் தான் இடஒதுக்கீட்டில் இலவசமாக படிப்பது சக நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை எனக் கூறினார். நாங்கள் அதிக பணத்தை செலவிட்டு படிக்கும் இடத்தில் நீ இலவசமாக படிக்கிறாய் என்று சிலர் கேட்டதாகவும் தெரிவித்தான். அதனால், சில நண்பர்களிடம் பேசுவதையே நிறுத்தியிருந்தான் என்று அவரின் தாயார் குறிப்பிட்டுள்ளார். 

தற்கொலை செய்துகொண்ட மாணவரின் குற்றச்சாட்டுக்கு மும்பை ஐஐடி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. முதலாமாண்டு மாணவன் தற்கொலை செய்துகொண்டது குறித்து பல கட்டுக்கதைகள் வெளிவருகின்றன. மாணவனின் இந்த முடிவுக்கு ஐஐடியில் இருக்கும் பாகுபாடே காரணம் என்று கூறுவதும், இது நிறுவனக் கொலை என்றும் வகைப்படுத்துவதும் ஏற்கத்தக்கதல்ல என்று ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com