உத்தரப் பிரதேசத்தில் அதிக அளவு மதுபானம் அருந்துவதாக நண்பர்களிடையே விளையாட்டாக நடைபெற்ற போட்டி விபரீதத்தில் முடிந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் நண்பர்களிடையே விநோதமான போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த ஜெய் சிங், தனது நண்பர்களான கேஷவ், போலா ஆகியோருடன் மது அருந்தச் சென்றுள்ளார்.
அப்போது நண்பர்கள் இருவரும் போட்டி ஒன்றை வைத்துள்ளனர். அதாவது, 10 நிமிடங்களில் 3 பாட்டில் மதுவை (நாட்டுச் சாராயம்) அருந்த வேண்டும் என போட்டி ஒன்றை வைத்துள்ளனர்.
இந்த போட்டியை ஏற்றுக்கொள்வதாகவும், தோல்வியடைந்தால், மதுபானத்துக்கான செலவை ஏற்றுக்கொள்வதாகவும் ஜெய் சிங் தெரித்து மதுபானத்தை அருந்தியுள்ளார்.
அதிக மது அருந்தியதன் காரணமாக நிலைத்தடுமாறிய ஜெய் சிங், ஷில்ப்கிராம் என்ற பகுதியில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனை அவரின் 16 வயது மகன் அறிந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளான். எனினும் மதுபோதையில் இருந்ததால், சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, ஜெய் சிங் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நண்பர்களான கேஷவ், போலா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இதயம் முரளி ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இரவு 10 மணி வரை சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

லிவ்-இன் உறவில் இருப்போருக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பொருந்தும்: உச்சநீதிமன்றம்

இந்திய அளவில் ரூ. 300 கோடி வசூலித்த ஸ்பைடர் மேன் திரைப்படம்!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



