மும்பை ஐஐடி மாணவர் தற்கொலையை விசாரிக்க சிறப்புக் குழு! 

முப்பை ஐஐடி மாணவர் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூத்த காவல்துறை அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை(எஸ்ஐடி) மகாராஷ்டிர அரசு நியமித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

முப்பை ஐஐடி மாணவர் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூத்த காவல்துறை அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை(எஸ்ஐடி) மகாராஷ்டிர அரசு நியமித்துள்ளது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், 

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி(18) ஐஐடியில் பி.டெக் படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பிப்.12 அன்று வளாகத்தில் அமைந்துள்ள விடுதி கட்டடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

மாணவன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஐஐடி.யில் பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏவும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, சோலங்கியின் மரணம் குறித்து எஸ்ஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

பிப்ரவரி 24 அன்று, சோலங்கியின் மரணம் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது- காவல்துறை இணை ஆணையர் (குற்றம்) லக்மி கௌதம் தலைமையிலான எஸ்ஐடி, வழக்கை மறுபரிசீலனை செய்து, சோலங்கியின் பெற்றோர், நிறுவன அதிகாரிகள் மற்றும் சம்பவத்திற்கு சாட்சியாக இருந்த மாணவர்களின் வாக்குமூலங்களை போலீஸார் பதிவு செய்து வருகின்றனர். 

இந்த வழக்கில் தற்போது எஸ்ஐடி விசாரணை நடத்தும் என்று அந்த அதிகாரி கூறினார். 

சோலங்கியின் பெற்றோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பிப்ரவரி 16ஆம் தேதி மும்பை போலீஸ் குழு குஜராத் சென்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com