
கோப்புப்படம்
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் (19 கிலோ) விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் நாளில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்ரின் விலையை உயர்த்தி எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. இந்நிலையில், 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஞாயிற்றுக்கிழமை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆங்கிலப் புத்தாண்டு: போடி கோயில்களில் சிறப்பு பூஜை
இருப்பினும், வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும், தற்போதுள்ள விலையில் விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.