டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,507 கோடி: ஒவ்வொரு ஆண்டும் 15% அதிகரிப்பு!

2022 டிசம்பர் மாதத்திற்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,49,507 கோடியாகவும், 11 ஆவது முறையைாக ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.4 லட்சம் கோடியை கடந்துள்ளது.
டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,507 கோடி: ஒவ்வொரு ஆண்டும் 15% அதிகரிப்பு!


புது தில்லி: 2022 டிசம்பர் மாதத்திற்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,49,507 கோடியாகவும், 11 ஆவது முறையைாக ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.4 லட்சம் கோடியை கடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீதம் அதிகரித்துளளதாக மத்திய நிதி அமைச்சகம்  தெரிவித்துள்ளது. 

மத்திய நிதி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி,  2022 டிசம்பருக்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,49,507 கோடியாக அதிகரித்துள்ளது.  இதில், மத்திய அரசின் மத்திய சரக்கு-சேவை வரியாக (சிஜிஎஸ்டி) வருவாய் ரூ.26,711 கோடியாகவும்,  மாநில அரசுகளின் சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) வருவாய் ரூ.33,357 கோடி, மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.78,434 கோடியாகவும், செஸ் வரியாக ரூ.11,005 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 

மத்திய அரசு ரூ.36,669 கோடியை சிஜிஎஸ்டிக்கும், ரூ.31,094 கோடியை எஸ்ஜிஎஸ்டிக்கும் ஐஜிஎஸ்டியில் இருந்து வழக்கமாக பகிர்ந்தளித்துள்ளது. 

டிசம்பர் 2022 இல் வழக்கமான பகிர்வுகளுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ 63,380 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ 64,451 கோடி.

2022 டிசம்பர் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாத ஜிஎஸ்டி வருவாயை விட 15 சதவீதம் அதிகரிப்பாகும். இந்த மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 8 சதவீதம் அதிகரித்துள்ளது மற்றும் உள்நாட்டு வா்த்தக நடவடிக்கைகள் மூலமான (சேவைகளின் இறக்குமதி உள்பட) வருவாய் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022 நவம்பரில் 7.9 கோடி இ-வே ரசீதுகள் உருவாக்கப்பட்டது, இது 2022 அக்டோபரில் உருவாக்கப்பட்ட 7.6 கோடி இ-வே ரசீதுகளை விட கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மாா்ச்சில் இருந்து தொடா்ந்து பத்து மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடியை  கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com