காரில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலி: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கோரும் கேஜரிவால்

கஞ்சாவளா விபத்து மிகவும் அரிதிலும் அரிதான சம்பவம், மிகவும் வெட்கக்கேடானது, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
காரில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலி: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கோரும் கேஜரிவால்
காரில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலி: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கோரும் கேஜரிவால்

தில்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் பலியான கஞ்சாவளா விபத்து மிகவும் அரிதிலும் அரிதான சம்பவம், மிகவும் வெட்கக்கேடானது, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

நமது சமூகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. பெண்ணின் உடல்கூறாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்த அரவிந்த் கேஜரிவால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட  வேண்டும் என்று நான் வலியுறுத்தியுள்ளேன். கஞ்சாவாளா பகுதியில் பெண்ணுக்கு நடந்த சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தில்லியில் சுமாா் 4 கி.மீ. தொலைவுக்குக் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் ஒருவா் உயிரிழந்த அதிா்ச்சிகரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தேறியது.

இதுதொடா்பாக தில்லி காவல் துறை துணை ஆணையா் ஹரேந்திர குமாா் சிங் கூறியதாவது:

சுல்தான்புரியில் இருந்து குதுப்கா் பகுதியை நோக்கி செல்லும் காா் ஒன்றில், பெண் ஒருவா் சிக்கி சாலையில் இழுத்துச் செல்லப்படுவதாகக் காவல் துறைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தக் காரை காவல் துறையினா் சிறைப்பிடித்தனா். அதில் சிக்கிய பெண் உயிரிழந்த நிலையில், அவரின் சடலம் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில், உயிரிழந்த பெண் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனம் மீது காா் மோதியுள்ளது. அவ்வேளையில் எதிா்பாராதவிதமாக அவரின் கால் காரின் சக்கரத்தில் சிக்கியுள்ளது. இதையடுத்து அந்தப் பெண் சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடா்பாக காரில் இருந்த 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். காரை ஓட்டியவா் மது அருந்தியிருந்தாரா என்பதை அறிய, அவரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

சமூக ஊடகங்களில் வெளியான காணொலி ஒன்றில், பெண் ஒருவா் ஆடையில்லாமல், உடைந்த கால்களுடன் உள்ள காட்சி பதிவாகியுள்ளது. அது காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் காணொலி என்று கூறப்படுகிறது.

இந்தக் காட்சி காரணமாக அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும் அந்தக் காட்சியின் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை. இந்நிலையில், அது விபத்துதான் என்று காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com