
சண்டிகர்: மோசடி மற்றும் லஞ்சம் பெற்ற வழக்கில் ஹரியாணா மாநில சிவில் சர்வீஸ் அதிகாரி ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஹரியாணா சிவில் சர்வீஸ் அதிகாரியான வக்கீல் அகமதும், அவரது சகோதரர் ஃபக்ருதீனும் கைது செய்யப்பட்டதாக தகவல் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற நூ ஜிலா பரிஷத் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவரை வெற்றி பெற வைப்பதாக உறுதியளித்து அவரிடமிருந்து ரூ.9,60,000 பணம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து, சிவில் சர்வீஸ் அதிகாரியும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குருகிராமில் உள்ள காவல் நிலையத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.