கேரளத்தில் அரசமைப்புச் சட்டத்தைப் பழித்து கருத்து தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடா்ந்து அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்த சஜி செரியான், மீண்டும் இன்று அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
கேரள அமைச்சராக பதவி வகித்தவா் சஜி செரியன். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த இவா், கடந்த ஆண்டு ஜூலையில் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ‘சாமானிய மக்களிடம் கொள்ளையடிக்க அரசமைப்புச் சட்டம் வாய்ப்புகளை வழங்குகிறது’ எனத் தெரிவித்தார். அமைச்சரின் இந்தக் கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க | சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!
அதனைத் தொடர்ந்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில், அவரை மீண்டும் அமைச்சரவையில் சோ்க்க கேரள ஆளுநருக்கு மாநில முதல்வா் பினராயி விஜயன் அண்மையில் பரிந்துரைத்தாா். முதல்வர் பினராயி விஜயனின் பரிந்துரையை ஏற்ற கேரள ஆளுநர் அவர் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்க ஒப்புதல் வழங்கினார்.
இதையும் படிக்க | கர்நாடக முதல்வரை நாய்க்குட்டியுடன் ஒப்பிட்ட சித்தராமையா
அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சஜி செரியனுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.