ஜம்மு-காஷ்மீரின் சூழ்நிலையை கையாள பாஜக அரசு தவறிவிட்டது: மெகபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீரில் நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறிய பாஜக தற்போது சமூகங்களுக்கு இடையே பிளவை உருவாக்கும் மக்களுக்கு ஆயுதம் வழங்கி வருவதாக மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் சூழ்நிலையை கையாள பாஜக அரசு தவறிவிட்டது: மெகபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீரில் நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறிய பாஜக தற்போது சமூகங்களுக்கு இடையே பிளவை உருவாக்கும் மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். 

மக்களுக்கு ஆயுதங்களை வழங்குவது, பயம், சந்தேகம் மற்றும் வெறுப்பு போன்ற சூழலை உருவாக்கும் பாஜகவின் நிகழ்ச்சி நிரலுக்கு மட்டுமே உதவும். இது ஒரு சமூகத்தை மற்ற சமூகத்திற்கு எதிராக மோத வைப்பதாகும். 

தனது தந்தையும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனருமான முப்தி முகமது சயத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, அனந்த்நாக் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் மெகபூபா பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். 

ரஜோரி தாக்குதலை அடுத்து கிராம பாதுகாப்புக் குழுக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதற்கான நடவடிக்கை, 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரின் நிலைமை சாதாரணமாகிவிட்டது என்ற பாஜகவின் கூற்றுக்களை அம்பலப்படுத்தியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீருக்குள் அதிக பாதுகாப்புப் பணியாளர்களை ஏன் கொண்டுவர வேண்டும்? உள்ளூர் மக்கள் ஆயுதம் ஏந்தியது ஏன்? இது பாஜகவைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. 

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு தேவை, இதை ராணுவ ரீதியாகத் தீர்க்க முடியாது. பூமியில் எந்த சக்தியாலும் தனது சொந்த மக்களுக்கு எதிரான போரில் வெற்றிபெற முடியாது. ஜம்மு-காஷ்மீர் ஏற்கனவே ராணுவ கன்டோன்மென்ட், இங்கு ராணுவத்துக்குப் பஞ்சம் இல்லை. 

கடந்த 30 ஆண்டுகளாக ஜனநாயக முறை மீட்டெடுக்கப்பட்டு, நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தப்படும் அளவுக்கு ராணுவம் தனது கடமைகளை சிறப்பாகச் செய்துள்ளது. ஆனால் இப்போது இது ராணுவத்தின் வேலை அல்ல என்று அவர் கூறினார். 

லடாக்கில் அண்டை நாடு ஆக்கிரமிப்புச் செயல்களைச் செய்த பின்னரும், சீனாவுடன் பேச்சுவார்த்தை மற்றும் நல்லிணக்கத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இது ராணுவ தீர்வாக இருக்க முடியாது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com