பஞ்சாபில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 9,917 போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சுக்செயின் சிங் கில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
மாநிலத்தில் கடந்த 6 மாதங்களில் 418.44 கிலோ ஹெராயின் போதைப்பொருளை போலீஸார் குழு மீட்டுள்ளதாக அவர் கூறினார். குஜராத் மற்றும் மகாராஷ்டிரா துறைமுகங்களிலிருந்து 147.5 கிலோ ஹெராயினை பஞ்சாப் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 565.94 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டுள்ளது.
ஹெராயினை தவிர 407 கிலோ அபின், 407 கிலோ கஞ்சா, 233 குவிண்டால் கசகசா மற்றும் 33.88 லட்சம் போதை மாத்திரைகள், ஊசி மற்றும் மருந்து குப்பிகள் ஆகியவற்றை போலீஸார் மீட்டுள்ளனர். மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து ரூ.7.72 கோடி பணத்தையும் மீட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மொத்தம் 7,533 எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.